Saturday, March 2, 2013

இலங்கை தூதரகத்தை மனிதநேய மக்கள் கட்சி முற்றுகை போராட்டம்

 


 சென்னை: இலங்கை தூதரகத்தை இன்று மாலை 4 மணிக்கு முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் இறுதிப் போருக்குப் பின்பு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட சிறுவன் பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஈவு இரக்கமற்ற இப் படுகொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இக்கொடுஞ் செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி அருகிலிருந்து முற்றுகை ஊர்வலம் தொடங்கி, இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.




Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/22/tamilnadu-manithaneya-makkal-katchi-seige-sri-lankan-embassy-170274.html




No comments:

Post a Comment